செயல்பாடு | PsyHealth

நன்றாக உணர நான் என்ன செய்ய வேண்டும்?

நல்வாழ்வை அடைய உதவும் 10 வழிகள் இங்கே:

  1. பேசுதல் : உங்களின் உணர்ச்சிகள், பிரச்சினைகள், மற்றும் அனுபவங்களை குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது சமூகத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது மன அழுத்தத்தை குறைத்து, புதிய பார்வைகளை அல்லது தீர்வுகளை கண்டுபிடிக்க உதவும். உங்கள் தாய்மொழியில் பேசுவதும் பரிமாறிக் கொள்வதும் நல்லதை ஏற்படுத்தலாம்.
  2. கலந்துகொளுதல்/ஈடுபடுவதல் : ஒரு சமூகம், சுற்றுப்புற மையங்கள், மொழி வகுப்புக்கள் /நடனம்/பாடல்/விளையாட்டு போன்ற செயல்பாடுகள் மூலம் உங்கள் விருப்பங்கள், ஆர்வங்கள், அச்சங்கள் அல்லது நம்பிக்கைகளை பகிர்ந்து. சமூக திட்டங்களில் பங்கு பெறுவதும் நல்லது.
  3. துறக்காதிருத்தல் / வாழ்க்கை நெருக்கடிகளை சமாளித்தல்: வாழ்க்கை நெருக்கடிகளை சரிசெய்ய நேரம் முக்கியமானது (அதிர்ச்சி, துக்கம் , பாதிப்பு). முக்கிய செயல்பாடுகளில் கவனம் செலுத்தி, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நேரத்தை ஒதுக்கி, வழங்கப்படும் ஆதரவை ஏற்றுக்கொள்வது அவசியம். உதாரணமாக, நிர்வாக அமைப்பைப் புரிந்துகொள்வது எளிதானது அல்ல.
  4. நீங்கள் இருப்பது போல் உங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்: உங்கள் உடல் மற்றும் அதன் குறியீடுகளை அறிந்து, உங்கள் நலனுக்காக முடிவுகளை எடுக்க, உங்கள் எல்லைகள், வலுவுகள் மற்றும் பலவீனங்களை வரையறுத்து, அவற்றை ஏற்றுக்கொளுதல்.
  5. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைப் பயிற்சி செய்தல் : உங்கள் ஆசைகள், அச்சங்கள் அல்லது வெளிப்படுத்த கடினமாக இருக்கும் பிற எண்ணங்களை வெளிப்படுத்த, பதற்றத்தை விடுவிக்க, ஓய்வெடுக்க மற்றும் வலிமையைப் பெற படைப்பாற்றலான செயல்களில் ஈடுபடுதல். உங்கள் சொந்த நாட்டில் ஏற்கனவே நீங்கள் விரும்பி செய்த மகிழ்ச்சியளிக்கும் செயல்களைச் செய்ய, ஆராய்ந்து உருவாக்குவதற்கு தனித்துவமான இடம் தேவை.
  6. ஓய்வு பெறுதல் : அமைதி மற்றும் ஓய்வு நிலை, காரியங்களையும், மனிதர்களையும் மகிழ்ச்சியாக அனுபவிக்க, சிந்தித்து முடிவுகள் எடுக்க அனுமதிக்கிறது. உங்களுக்காக நேரம் ஒதுக்கி, தனியாகவும், குழந்தைகள் இல்லாமல் செயல்களைச் செய்து, குடும்ப வாழ்க்கையிலிருந்து பிரிந்து மீளாய்வு பெறுவது முக்கியம்.
  7. புதிய விடயங்களைக் கற்றதல்: உங்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்து வெளியேறி, சுயமரியாதையை வலுப்படுத்தி, உங்கள் எண்ணங்களை மேம்படுத்த உதவுகிறது. மொழியை கற்றல், சுதந்திரம் மற்றும் தன்னம்பிக்கையை பெற உதவுகிறது. ஒரே போன்ற அனுபவங்கள் உள்ள மக்களை சந்தித்து, ஒரு பிணைப்பை உருவாக்க உதவுகிறது. புதிய விடயங்களை கற்றல் ஊக்கமளிக்கும், பலனளிக்கும் மற்றும் முன்னேற்றத்தின் உணர்வை ஏற்படுத்துகிறது.
  8. சுறுசுறுப்பாக இருத்தல்: சுறுசுறுப்பாக இருத்தல்: மனதைத் தெளிவுபடுத்துவதற்கும், அழுத்தத்தை விடுவிப்பதற்கும் மற்றும் வாழ்க்கை சூழலில் பிரச்சினைகளிலிருந்து வெளியேற உதவுகிறது. தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் அல்லது வாரத்திற்கு 2.5 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
  9. நண்பர்களுடன் தொடர்பில் இருத்தல் : உங்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்து வெளியேற, உங்கள் வீட்டிலிருந்து விலகி புதிய மனிதர்களை சந்திக்க உதவுகிறது. நண்பர்களுடன் உரையாடுவதன் மூலம், நீங்கள் கேட்கப்பட்டு ஆதரிக்கப்படுவதாக உணர்வது. மேலும், விமர்சனங்கள் உங்களை சிறந்தவராக மாற உதவி செய்யும், தீர்வுகளை கண்டுபிடிக்க மற்றும் உங்கள் மனதை மற்றும் பார்வைகளை திறக்க உதவுகிறது.
  10. உதவியை கேட்டல் : தனித்து விடப்பட்டு உணர்வதைத் தவிர்க்க, உங்கள் எல்லைகளை மதித்து அவற்றை அங்கீகாரம் செய்ய உதவுகிறது. ஆதரவு கேட்பது, சில செயல்முறைகள் தெளிவாக இல்லாத போது உதவி கேட்க உதவுகிறது; உதாரணமாக, (பொது உதவி மற்றும் பெற்றோர்களுக்கான வலைப்பின்னல்). வாழ்வின் சவால்களை சமாளிக்க உதவி கேட்பது ஒரு பலவீனம் அல்ல; மாறாக, அது அதிக தைரியத்தை காட்டுகிறது.
    கூடுதல் பரிந்துரை: ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும், அமைதியான, திரைகள் இல்லாத சூழலில் உணவு உட்கொள்வதும் நலவாழ்வில் முக்கிய பங்கை வகிக்கின்றன.

சமூகத்தின் முக்கியத்துவம்

ஒரு புதிய நாட்டிற்கு வருகை தருவது அல்லது புதிய கலாச்சாரத்தை கண்டறிவது போன்ற சில மாற்றக் கட்டங்களில், தனிமையாக, தனிமைப்படுத்தப்பட்டதாக, சில சமயங்களில் கொஞ்சம் தொலைந்து போனதாக உணருவது சாதாரணமாகும். இந்த தருணங்களைச் சமாளிக்க, சமூகம் மதிப்புமிக்க ஆதரவை வழங்க முடியும்: நீங்கள் உங்கள் தாய்மொழியைப் பேசலாம், தகவல் அல்லது ஆலோசனையைப் பெறலாம் அல்லது பொதுவாக நிர்வாக நடைமுறைகள் அல்லது ஒருங்கிணைப்பை எளிதாக்கலாம். இது அதே அனுபவங்களை அனுபவித்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. சமூக நிகழ்வுகளில் ஒன்றாகக் கூடுவதற்கும், மகிழ்ச்சியின் தருணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், அன்றாட வாழ்க்கையிலிருந்து தப்பிப்பதற்கும், அழுத்தத்தைக் குறைப்பதற்கும் வாய்ப்பளிக்கின்றன. எனவே, சமூகம் வாழ்க்கையின் சில நேரங்களில் கடினமான சவால்களை சிறப்பாக எதிர்கொள்ளவும், நன்றாக உணரவும் ஒரு முக்கிய ஆதாரமாகிறது.

எனினும், சமூகமே ஒரே ஆதாரமாக இருக்கக் கூடாது. புலம் பெயர்ந்த நாட்டின் மற்ற சமூகங்களோடு உறவுகளை வளர்த்தல், புதிய மனிதர்களை சந்தித்தல், உதாரணமாக அயலவர்களுடன் பேசுவது மிக முக்கியம். இந்த தொடர்புகள் தனிமையைக் குறைத்து, நன்றாக உணரச் செய்வதற்கு உதவுகின்றன.

அன்றாட வாழ்க்கைக்கான வளங்கள்

இங்கு அன்றாட வாழ்க்கையின் பல்வேறு துறைகளுக்கான தேவையான அனைத்து தகவல்களும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன (சுகாதாரம், சமூக பாதுகாப்பு, பள்ளி மற்றும் பயிற்சிகள் முதலியன).

இந்த சிற்றேடு சுவிஸ் சுகாதார அமைப்பின் பல்வேறு அம்சங்களை சுருக்கமாக விளக்குகிறது.

Sui SRK செயலி: அன்றாட வாழ்க்கைத் தலைப்புகள் குறித்த தகவல்கள், சுய பராமரிப்புக்கான வளங்கள், ஆதரவுக்காக ஒரு நிபுணருடன் இணைவதற்கான அரட்டை அம்சம் ஆகியவற்றை வழங்குகின்ற இலவச செயலி.

சுவிட்சர்லாந்தில் உதவி மற்றும் ஆதரவு சங்கங்கள்

பல உதவி சங்கங்கள் உள்ளன:

சட்ட உதவிக்கு:

மொழித் தடை

  • மொழித் தடையினால் சங்கங்கள் அல்லது நிறுவனங்களை தொடர்புகொள்வது சிரமமாக இருக்கலாம். உதவி சங்கங்கள் (எ.கா. காரிடாஸ், செஞ்சிலுவை சங்கம் மற்றும் OSAR) தாய்மொழியில் தொடர்புகொள்வதற்கான மொழிபெயர்ப்பாளர்களை வழங்க முடியும்.
  • www.inter-pret.ch என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு சேவைகள் கிடைக்கின்றன, அவை பேச்சு மொழியில் சமூக மொழிபெயர்ப்பாளர்களை வழங்குகின்றன. நிர்வாக, மருத்துவ அல்லது சட்டப்பூர்வ நியமனங்களுக்கு அவர்கள் உங்களுடன் வரலாம்.
  • உள்ளூர் சமூகங்கள், உதாரணமாக, நிர்வாக நடவடிக்கைகள் அல்லது மருத்துவர்களை தொடர்புகொள்வதில் ஆதரவு வழங்க முடியும்.
  • மேலும் மொழிபெயர்ப்பு மற்றும் தொடர்புக்கு உதவிகரமான சில இலவச செயலிகள் உள்ளன:
    • Tarjimly – Refugee Translation (அகதிகள் மொழிபெயர்ப்பு)
    • Refugee Phrase Book (50 க்கும் மேற்பட்ட மொழிகளில் அன்றாட வாழ்க்கையின் அவசியமான வசனங்கள்)
    • Refugeye இது படத்தினூடாக மொழிபெயர்க்கவும் தொடர்பு கொள்ள உதவுகிறது
    • புலம்பெயர்ந்த மொழியை கற்றுக்கொள்வதற்கு இலவச ஸ்மார்ட்போன் செயலிகள் உள்ளன:  Duolingo, Babbel, MemRise, HelloTalk, மற்றும் மேலும் பல.”

மாநிலதிற்க்கு ஏற்ப சங்கங்களும் மற்றும் அமைப்புகளும்

பிறிபேர்க் (Fribourg)

ஜெனிவா (Genève)

யூரா (Jura)

நொசத்தால் (Neuchâtel)

ரிசினோ (Tessin)

  • ஏஜன்ஸ் டெர்மன் SOS டிசினோ: தகவல்தொடர்புச் சிரமங்கள் மற்றும் மொழி அல்லது கலாச்சாரம் சார்ந்த தவறான புரிதல்களுக்கு உதவ கலாச்சாரங்களுக்கு இடையிலான பொருள்விளக்கச் சேவைகள்
  • ஆண்டெனா மே தினம்: சமூக மற்றும் சுகாதாரச் சேவைகள் குறித்தும், சுகாதார ஊக்குவிப்பு முயற்சிகள் குறித்தும் இலவச மற்றும் இரகசிய ஆலோசனை
  • திருப்பி அனுப்புவதற்கான உதவி: சுவிட்சர்லாந்தில் இருந்து புகலிடம் கோருவோர் தாமாக முன்வந்து வெளியேறுவது குறித்த தகவல் மற்றும் அவர்களுடைய தாய்நாட்டில் மீண்டும் ஒருங்கிணைவதற்கான ஆதரவு
  • “Il டிராகிட்டோ” சங்கம்: ஒருங்கிணைப்பில் குறிப்பாக கவனம் செலுத்துகின்ற குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கான சமூகமயமாக்கல், பயிற்சி மற்றும் ஆதரவு மையம். இது லுகானோ மற்றும் லோகார்னோ ஆகிய இடங்களில் அமைந்துள்ளது
  • காஸா ஆஸ்ட்ரா: மெண்ட்ரிசியோவில் உள்ள அவசரகால வரவேற்பு மையம்
  • காஸா மர்டா: பெல்லின்சோனாவில் உள்ள அவசரகால வரவேற்பு மையம்
  • சென்ட்ரோ கலிகாண்டஸ்: சியாசோவில் உள்ள சமூகமயமாக்கல் மையம் மற்றும் புலம்பெயர்ந்த மக்களுக்கான பரிந்துரைச் சேவை
  • டிசினோவில் உள்ள சமூகமயமாக்கல் மையங்கள்: குடும்பங்களும் ஒன்றுகூடுவதற்கும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் செயல்பாடுகள், கேம்கள் மற்றும் வாய்ப்புகளை வழங்கும் மையங்கள்
  • “பாவோபாப்” கூட்டுறவு: பெல்லின்சோனாவில், பன்மொழிக் கலாச்சார நூலகத்தைக் கொண்டுள்ள, குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்கின்ற, 12 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான சமூக-கல்வி வீதி நடவடிக்கைகளை வழங்குகின்ற சமூகமயமாக்கல் மையம்
  • OSC தொடர்பு மையம் (0848 062 062): வட்டார சமூக-மனநல அமைப்பின் சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது, உடனடி ஆதரவை உறுதிசெய்கிறது, OSC-ஆல் வழங்கப்படும் மனநலச் சேவைகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது
  • பாகுபாட்டுத் தடுப்பு மையம்: இனம், சமயம், பாலினம், அல்லது பாலியல் நோக்குநிலை சார்ந்த பாகுபாட்டினை அனுபவித்துள்ள தனிநபர்களுக்கான இலவச, இரகசிய ஆதரவு மற்றும் ஆலோசனைச் சேவைகள்
  • SOS டிசினோ சட்ட சேவை: குடியிருப்பு அனுமதிப் பிரச்சனைகள் தொடர்பான சட்ட ஆலோசனை மற்றும் பரிந்துரை வழங்குகிறது
  • காரிடாஸ் டிசினோ சமூக சேவை: ஆலோசனை, நிதி மேலாண்மை உதவி, நிர்வாக ஆதரவு, மனநோய் சிகிச்சை, குடும்ப ஆதரவு, கடன் தடுப்பு மற்றும் சிகிச்சை

வலே (Valais)

வோ (Vaud)

  • Appartenances: சமூக ஒருங்கிணைப்பு இடம்
  • Association Panmilar: பிறப்பைச் சுற்றி ஆதரவு
  • Association Nouvelles Perspectives: பிரெஞ்சு மற்றும் குடியுரிமை பாடநெறிகள், ஒருங்கிணைப்புப் பயிலரங்குகள் மற்றும் சுகாதாரத் தடுப்புச் செயல்பாடுகள்
  • Astree: அனைத்து வகையான கடத்தலிலும் சுரண்டலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு
  • Bureau cantonal pour l’intégration des étrangers et la prévention du racisme (வெளிநாட்டவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் இனவெறியைத் தடுப்பதற்கான மாநில அலுவலகம்): உங்கள் நிறுவலுக்குத் தேவையான தொடர் தகவல்களை வழங்கும் தளம் மற்றும் சிற்றேடு
  • Caritas Vaud: சட்ட மற்றும் சமூக ஆதரவு
  • Carnet d’adresses Petite Enfance: புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவி
  • Coordination Asile-Migration Riviera: நிர்வாக நடைமுறைகளில் ஆதரவு
  • CSP Vaud: சட்ட ஆதரவுக்கான நிரந்தர தொலைபேசி தொடர்பு
  • EPER: நாடுகடத்தப்பட்டவர்களுக்கான சட்ட உதவி சேவை மற்றும் Âge et migration திட்டம்
  • Français en jeu: பிரெஞ்சு பாடநெறிகள்
  • 0 முதல் 5 வயதுள்ள குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான இலவச வரவேற்பு இடங்கள்: Maisons vertes et Association Arc-Echange
  • புலம்பெயர்ந்தோர் சங்கங்களின் பட்டியல்: லவுசான் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
  • Plateforme-asile Vaud: வோ மாநிலத்தில் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கான வரவேற்பு மற்றும் வழிகாட்டி தளம் + மொழி பாடத்திட்ட முன்மொழிவு
  • SOS Asile Vaud: புகலிடக் கொள்கை, இடம்பெயர்தல் கொள்கை: தகவல், கூட்டமைப்பு மற்றும் கள நடவடிக்கைகளுக்கான ஆதரவு

பொதுத் தகவல்கள்

  • சுவிட்சர்லாந்து செஞ்சிலுவைச் சங்கம்: அன்றாட உதவி.
  • Migesplus.ch: சுவிட்சர்லாந்தில் சுகாதாரம் மற்றும் வாழ்க்கை பற்றிய நடைமுறைத் தகவல்களைப் பல மொழிகளில் வழங்குகின்ற சுவிஸ் செஞ்சிலுவைத் தளம்
  • அகதிகள் மற்றும் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களுக்கான தகவல் சிற்றேடு.
  • சுவிட்சர்லாந்தில் அன்றாட வாழ்க்கை பற்றி தகவல் காணொளி (உரை வாசிப்பு விருப்பத்துடன்).
  • La page fide வெவ்வேறு சான்றளிக்கப்பட்ட மொழி வகுப்புகளை ஒன்றிணைக்கிறது.

பாதிப்பு

  • அன்றாட வாழ்வில் ஏற்படும் அதிர்ச்சியின் தாக்கத்தை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்த ஆலோசனைகளை இந்த காணொளி வழங்குகிறது.
  • அதிர்ச்சிகரமான அனுபவங்களைச் சமாளிக்க உதவ விரும்பும் அகதிகளுக்கான பல மொழிகளில் ஒரு ஆதரவு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

குடும்பம்