சுகாதார நிபுணர்களின் பட்டியல்

உங்களைச் சுற்றியுள்ள பல வல்லுநர்கள்

உங்களுக்குப் பெரும் உதவியாக இருக்க முடியும். சிரமங்கள் அல்லது உளவியல் துன்பம் ஏற்பட்டால், அவர்கள் உங்களை வரவேற்று, கேட்டு, தேவையான நிபுணரிடம் உங்களை வழி நடத்த முடியும்.

  • வேலை இடத்தில்: நிறுவன மருத்துவர், ஊழியர்கள் பிரதிநிதி அல்லது தொழிற்சங்க உறுப்பினர்.
  • சிகிச்சை மையங்களில்: செவிலியர், மருத்துவச்சி, மருத்துவர்.
  • பள்ளியில்: பள்ளி செவிலியர், ஆசிரியர் அல்லது நடுவர்.
  • சுற்றுப்புற பொழுதுபோக்கு மையங்களில் : அனிமேட்டர்(animator) அல்லது சமூகப் பணியாளர்.

இவர்கள் அனைவரும் முக்கிய தொடர்புகளாக இருக்கிறார்கள் மற்றும் உங்களை தேவையான உதவிகளுக்குத் தகுந்த வழியில் வழிநடத்த வல்லவர்கள். அவர்களிடம் ஆலோசனை கோர தயங்காதீர்கள்; உங்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவது அவர்களின் பணியாகும்.

சுகாதாரக் காப்பீடு மூலம் பெரும்பாலான உதவிகள் இலவசமாகவோ அல்லது செலவினமாகவோ கிடைக்கின்றன. எனவே, உதவிக்காக அவர்களை அணுகுவதில் தயக்கப்பட வேண்டாம்.

சந்தேகம் இருந்தால் அல்லது யாரை அணுக வேண்டும் என்பதில் குழப்பம் இருந்தால், உங்கள் குடும்ப மருத்துவர் உங்களை சரியான நபரிடம் வழிநடத்த முடியும்.

மேலும், இந்த இணையதளத்தில், உங்கள் அருகிலுள்ள உளவியல் நிபுணர்களைத் தேடலாம். உங்களின் தேவைகள் மற்றும் பரிந்துரைக்கப்படும் மொழி அடிப்படையில் ஒரு சுருக்கமான கேள்வித்தாளை பூர்த்தி செய்தால் போதுமானது. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள சேவைகளைத் தெரிந்து கொள்ள, ஒவ்வொரு நிபுணரின் செயல்முறை விவரங்களை அவர்களது சுயவிவரத்தில் காணலாம். இருப்பினும், ஒவ்வொரு நபருக்கும் உள்ள தனிப்பட்ட சாத்தியக்கூறுகளைப் பற்றி விசாரிக்க வேண்டும்.

அவசர தொலைபேசி எண்கள்

கடுமையான நெருக்கடி ஏற்பட்டாலோ, ஒரு நபர் தனக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ ஆபத்து விளைவிக்கும் சூழ்நிலையில் இருந்தாலோ, நிலைமை அவசரமானது. உடனடியாக 144 அல்லது உங்கள் மாநில மனநலம் அவசர சேவையைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு சிறிய சந்தேகமோ அல்லது நீங்கள் கட்டுப்பாட்டை இழப்பதைக் உணர்ந்தாலோ, அவசர சேவையை அழைக்க தயங்கவேண்டாம்.

  • பிறிபேர்க் (Fribourg): 0263080808
  • ஜெனிவா (Genève): 0223723862
  • யூரா (Jura): 144
  • நொசத்தால் (Neuchâtel): 0327551515
  • வோ (Vaud): 0848133133
  • வலே (Valais): 0800012210
  • ரிசினோ (Tessin): 144

ஆபத்து அதிகமாக இருந்தால், 117 என்ற எண்ணில் காவல்துறையை அழைக்கவும் முடியும்.

போதை/நுகர்வு

நாம் சோகமாக, மன அழுத்தமாக அல்லது சோர்வாக உணரும்போது, புகைபிடித்தல், மது அருந்துதல், மருந்துகள் பயன்படுத்துதல், திரைகளில் அதிக நேரம் செலவிடுதல் அல்லது சூதாட்டம் போன்ற “ஆபத்தான” பழக்கங்களின் மூலம், நமது பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க முயற்சிக்கலாம். அந்த நேரத்தில் நிவாரணமாக தோன்றினாலும், இந்த பழக்கங்கள் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். உங்கள் அல்லது உங்களை நெருங்கியவர் ஒருவரின் நுகர்வினால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உதவியை நாடுவது அவசியம்.

பொருட்களின் (மது, மருந்துகள்) அதிகமான நுகர்வு ஆரோக்கியத்திற்கு தீங்கான விளைவுகளை ஏற்படுத்துகிறது : முக்கிய உறுப்புகளின் சேதம், புற்றுநோய், இருதய நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, மன அழுத்தம் மற்றும் பதட்டம், அறிவாற்றல் குறைபாடு, சமூக தனிமைப்படுத்தல் போன்றவை.

Addiction Suisse இங்கு நிகோடின் பொருட்கள், மது, புகையிலை, மற்றும் சூதாட்டம் ஆகியவற்றை பயன்படுத்துவோருக்கு உதவி வழங்கும் தளங்கள் மற்றும் தொலைபேசி எண்களின் முழு பட்டியலை வழங்குகிறது உங்கள் குழந்தைகள் குறித்து கவலைப்படுகிறீர்களா? இந்த சிற்றேட்டைப் பாருங்கள்.

அவர்களை எப்படி பாதுகாப்பது என்பதை யோசிக்கிறீர்களா? இந்த துண்டறிக்கைப் பாருங்கள்.

நீங்கள் ஒரு அடிமையான நபருடன் நெருக்கமாக இருக்கிறீர்களா? இந்த சிற்றேட்டைப் பாருங்கள்.

திரைகள்/இணையம்

குழந்தைகள் திரைகளை அதிகமாகப் பயன்படுத்துவதைப் பற்றி பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய சில அறிகுறிகள்:

  • கணினி அல்லது கேம் கன்சோல்(the game console) (உதாரணமாக பள்ளியில் தேவையான பணிகளுக்கு வெளியே) பகலில் பொழுதுபோக்கிற்காக பல மணி நேரங்கள் செயல்படுகிறது.
  • குழந்தை தனது நண்பர்களை சந்திப்பதை தவிர்க்கின்றது, மற்ற செயல்பாடுகளில் அல்லது பொழுதுபோக்குகளில் ஆர்வம் இழக்கின்றது.
  • பள்ளி மதிப்பீடுகள் அல்லது கற்றல் திறன்களில் தொடர்ந்து குறைவாக வருகிறது.
  • குழந்தை தன்னை புறக்கணித்து, பசி இழந்து, பகலில் அடிக்கடி சோர்வாக அடைகிறது.
  • குழந்தை கணினி பயன்படுத்துவதை தடைசெய்யும் போது, கோபம் கொள்கிறது அல்லது மனச்சோர்வடைகிறது.

தம்பதி வன்முறைகள்

அவசர தொலைபேசி எண்கள்:

  • 117: காவல்துறை
  • 144: அவசர மருத்துவ ஊர்தி (ஆம்புலன்ஸ்)/ அவசர சிகிச்சை

அநாமதேய மற்றும் ரகசிய உதவி எண் (24 மணி நேரம்)

தனியுரிமையும் ரகசியத்தையும் காப்பாற்றும் கேள்வி நிலையம் (24/24 மணிநேரம்):

  • 143: La main tendue (உதவும் கரம்)
  • 147: குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான ஆலோசனை

கிடைக்கக்கூடிய பிற வளங்கள்:

  • நிபுணர்களிடம் அநாமதேயமாக கேள்வி கேட்க (காலக்கெடு 3 வேலை நாட்கள்): Violence que faire (வன்முறை என்ன செய்வது). தொடர்பு பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் இத்தாலிய மொழிகளில் வழங்கப்படுகிறது.
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கான ஆலோசனை மையங்கள் (LAVI) பட்டியலை மாநிலம் அடிப்படையில் கண்டறியவும்: Aide aux victimes (பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி)
  • குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தங்குமிடங்களின் பட்டியல்
  • தகவல் காணொளி  “குடும்ப வன்முறை, என்ன செய்வது? »

வன்முறை ஏற்பட்டால், வீட்டை விட்டு வெளியேறி, காவல்துறையை (117) அல்லது பணியில் இருக்கும் மருத்துவரை அழைத்தல் (இங்கு மாநில அடிப்படையில் பட்டியல்) உங்களை (மற்றும் உங்கள் பிள்ளைகளை) பாதுகாத்துக் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. LAVI மையங்களும் உங்களுக்கு ஆதரவளிக்கலாம்.

மனஅழுத்தம்

மனஅழுத்த ஹார்மோன்கள் (இயக்குநீர்கள்) உற்பத்தி செய்யப்படும் நான்கு சூழ்நிலைகள் பற்றிய ஆய்வுகள் உள்ளன.

  • சூழ்நிலை மேலாண்மையின் இழப்பு
  • எதிர்பாராத மற்றும் புலனாய்வு இல்லாத சூழ்நிலை
  • புதிய சூழ்நிலைகள்
  • நமது அகந்தையை பாதிக்கும் சூழ்நிலை

மனஅழுத்தத்தைக் குறைக்க, இந்த மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையைப் பற்றி சிந்தித்து, அதனை மாற்றுவதற்கான வழிகளை கண்டறிந்து செயல்பட வேண்டும். உதாரணமாக, நமது திறமைகளும், அகந்தையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பிறர் நமது திறன்களை சந்தேகிக்கிறார்கள் என்ற எண்ணம் நமக்கு இருந்தால், நாம் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் பலப்படுத்திக் கொள்ளலாம், நம் திறன்களை நம்பவும், நம்மை நாமே தொடர்ந்து கேள்வி கேட்பதைத் தவிர்க்கவும் முடியும். மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் இந்த சூழ்நிலைகளில் முன்கூட்டியே செயல்படுவதன் மூலம், எதிர்காலத்தில் இந்த விரும்பத்தகாத உணர்வைக் குறைக்க முடியும்.

மனஅழுத்தத்தின் போது, பல்வேறு கருவிகள் பயனுள்ளதாக இருக்கலாம். அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்:

மனஅழுத்தத்தை குறைக்கவும், உங்களை மறுசீரமைக்கவும், உங்கள் சகிப்புத்தன்மையை வளர்க்கவும் பல்வேறு கருவிகள் உள்ளன,

  • இப்போது மற்றும் இங்கே கவனம் செலுத்துதல், மென்மையாக தன்னை அணைத்துக்கொள்ளுதல், தரையில் வேரூன்றி நிலைநிறுத்துதல், மற்றும் புகுந்த எண்ணங்களை கற்பனை பெட்டியில் வைக்குதல் மனஅழுத்தத்தை குறைக்கவும், பதற்றத்தை தளர்த்தவும், இப்போது நிகழும் தருணத்துடன் மீண்டும் இணைவதற்கும் உதவும்.
  • ஆழ்ந்த சுவாச பயிற்சிகளைச் செய்வதும், உங்கள் கவலைகளை நிர்வகிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவற்றைச் செய்வதன் மூலம் (நாள் முழுவதும் செய்வதைவிட) நீங்கள் பதட்டமாக அல்லது கவலையாக உணரும்போது, கட்டுப்பாட்டை மீட்டெடுக்க உதவும் கருவிகள் ஆகும்.
  • சுவாசப் பயிற்சிகளைச் செய்வதும், நேர்மறையான விடயங்களைக் கற்பனை செய்வதும் நீங்கள் சரியான முடிவுகளை எடுக்க விரும்பும்போது அமைதியடைவதற்கான வழிகளாகும்.
  • நீங்கள் எதிர்காலத்தில் சவால்களை சமாளிக்க உங்கள் மீள்திறனை வளர்க்கவும், உள் வளங்களை வலுப்படுத்தவும், நம்பிக்கையுடன் சிந்திக்கவும், அன்பும் இரக்கமும் கொண்டவராக செயல்படவும் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், உங்கள் வளங்களையும், உங்களுக்கு நன்மை தரும் விடயங்களையும் பட்டியலிடுவது, நீங்கள் அனுபவித்ததன் அடிப்படையில் எதிர்காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அறிய உதவும்.

தற்கொலை எண்ணங்கள்

உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருந்தால், அவற்றைப் பற்றி பேசுவது மற்றும் உதவி பெறுவது மிகவும் அவசியம்.

அவசர தொலைபேசி எண்கள்:

  • 143: பெரியவர்களுக்கு, இலவசமாக, அநாமதேயமாகவும் ரகசியமாகவும், ஆங்கிலத்தில் தொலைபேசி உதவி : 0800 143 000
  • 147: Pro Juventute (இளைஞர்கள்)
  • 144: மருத்துவ அவசர சிகிச்சை